திருச்சியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை, 25,000 ரூபாய் கொள்ளையடித்து திருடர்கள் கைவரிசை!
திருச்சி கருமண்டபம் 1வது தெரு அருகே உள்ளது கல்யாணசுந்தரம் நகர், இதில் நந்தினி தேவி, அவரது கணவர் ஜெயராஜ் மற்றும் ஜெயராஜின் அன்னை வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மன்னார்குடி அருகே உள்ள உறவினர்கள் வீட்டு திருமணத்திற்காக சென்றுவிட்டு இன்று மாலை 4 மணி அளவில் வீட்டைத் திறக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது சாவியைப் போட்டு திறக்க முயன்றபோது கதவு திறக்காமல் இருந்துள்ளது, பின்னர் உன்னிப்பாக கவனிக்கும் போது மரக்கதவில் உள் பூட்டு உடைந்து இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.
பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 சவரன் நகை மற்றும் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் ரொக்கம் 10 பட்டு புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிர்ச்சியில் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் எத்தனை சவரன் நகை காணாமல் போனது? இதே பகுதியில் வேறு எங்கும் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக போன்ற பல கோணங்களில்…. கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர், மற்றும் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்,மேலும் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.