ஸ்ரீ லலிதா மானிய பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த திருஈங்கோய்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதா மானிய பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
மாதாஜி சரஸ்வதி தலைமையில நடைபெற்றது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் 205 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியின் மாதாஜி வித்யாம்பாள் மற்றும் யோகினிகள், தாளாளர் தீக்ஷிதாம்பா, தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார்.