எம்.ஐ.டி வேளாண் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா
திருச்சி மாவட்டம் முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாளான நேற்று மங்களம் ஊராட்சியில் உள்ள கோவில்கள் மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டு முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிறைவு விழாவிற்கு எம்.ஐ.டி கல்லூரியின் துணைத் தலைவர் பிரவீன் குமார், மங்களம் ஊராட்சி தலைவர் சுஜாதா, முன்னாள் தலைவர் பொறைக்கலான், கல்லூரி முதல்வர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமை சிறப்பாக நடத்த உதவிய மங்களம் ஊராட்சி மன்ற தலைவர், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்ளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் மங்களம் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் எம்.ஐ.டி .வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.