மயானம் இல்லாததால் இறந்தவர் உடலை எரியூட்ட முடியாமல் தவிக்கும் பட்டியலின மக்கள்

0 302
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள்.

இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமாக மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.எங்கள் பகுதியில் யாராவது உயிரிழந்தால் மயானத்திற்க்கு கொண்டு செல்ல சொந்த மயானம் வழித்தடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வயல் வரப்புகளில் செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளோடு எங்கள் சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.