பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, பிப்.2 திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாளை (03.2.2023) காலை 7.15 மணி அளவில் கழக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் வி.என்.நகரில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மவுன ஊர்வலமாகச் சென்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.