முசிறியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

0 274
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறியில் லயன்ஸ் சங்க மண்டலத்திற்கு உட்பட்ட 14 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மண்டலம் 2ன் மாநாடு தாபேட்டை ரோடு மின்வாரியம் அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் லயன் பொறியாளர் அருள் வேல் தலைமை வகித்தார். லயன் மாவட்ட ஆளுநர் சேது சுப்பிரமணியன், துணை ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள், மாவட்ட நிர்வாகிகள் 45க்கும் மேற்பட்ட சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் மற்றும் பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார. லயன் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.