கழிவுகளை குறைக்க விழிப்புணர்வு முகாம்

0 319
Stalin trichy visit

திருச்சி, பிப்.4 கழிவுகளை குறைக்க அறிவுறுத்தும் விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி சூர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் எரிசக்தி மற்றும் வள நிறுவனம் Teri இணைந்து அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் நடத்தியது. இந்த விழிப்புணர்வு முகாமில் வையம்பட்டியைச் சேர்ந்த 300 பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வையம்பட்டி ஊராட்சி மற்றும் சூர்யா நினைவு அறக்கட்டளையின் தலைவர் சூர்யா வி.சுப்ரமணியன் தலைமை வகித்து நாம் எவ்வாறு கழிவுகளை குறைப்பது அந்த குறைக்கும் கழிவுகளை எப்படி மறு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது நாம் எப்படி சிக்கனமாக செலவு செய்வது தண்ணீரை தண்ணீரை மின்சாரத்தை என்பதை விரிவாக எடுத்துரைத்தார். சீனியர் ப்ரோக்ராம் ஆபிசர் Teri பல்லவி, சூர்யா நினைவு அறக்கட்டளையின் பொருளாளரும் சூர்யா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளருமான நாகலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கழிவுகளை குறைப்பதும் மறுசுழற்சிப்பரு செய்வதற்கும் உண்டான நவீன வழிமுறைகளை ஃபார்ம் இந்தியா தங்கபாண்டியன் மற்றும் இயற்கை ஆர்வலர் செல்வி, அந்தோணி ஆகியோர் நாம் பயன்படுத்தும் காய்கறிகளை நாமே தயாரிக்கலாம் நம் வீட்டில் வரும் கழிவு பொருட்களை எப்படி மறுசுழற்சி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பதை விளக்கி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.