காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு திட்ட மாபெரும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு திட்டம் தொடர்பான மாபெரும் முகாமில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சுப்புராமன்,துணைத்தலைவர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் கலைகுழுவினரை கொண்டு கரகாட்டம் ஆடி, விழிப்புணர்வு பாட்டுகள் பாடி மாணவ, மாணவியர்கள், பொதுமக்களுக்கு நெகிழி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செயல் அலுவலர் காட்டுப்புத்தூர் பேரூராட்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் பையினை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் தாங்கள் மஞ்சள் பையினை பயன்படுத்துவதுடன் தங்களது பெற்றோர்கள், சுற்றத்தார்களையும் மஞ்சள்பையினை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என கேட்டு
கொள்ளப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கொண்டு பேரூராட்சி அலுவலகத்திலிருந்து கடைவீதி, பேருந்துநிலையம் வழியாக நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நெகிழி ஒழிப்பு தொடர்பான வாசகங்களை முழுங்கி கொண்டு பள்ளிவரை சென்று பேரணி முடிவடைந்தது .
பேருந்து நிலையத்தில் மக்களுக்கு நெகிழி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், துணைத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டு மனித சங்கிலி அமைத்து நின்றனர்.
பேரூராட்சி பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்களை கொண்டு முகாமின் முக்கிய நிகழ்வான தூக்கியெறியப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் சேகரம் செய்யப்பட்டது. பள்ளியில் மாணவ, மாணவிகள், கலைகுழுவினரால் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்று விழா நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் துணைத்தலைவர் சிவசெல்வராஜ், ஆ
சிரியர்கள், மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.