ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

0 287
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து, குட்கா பொருட்கள் விற்ற ஒரு லட்சம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

லால்குடி காமாட்சி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது லால்குடி அய்யன் வாய்க்கால் கரை காமாட்சி நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் 48 வயதான பக்ருதீன் வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததில் 24 மூட்டை ஹான்ஸ், 8 மூட்டை கூலிப், 21 மூட்டை விமல் பாக்கு என மொத்தம் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை விற்ற பணம் ரூ. 1,00, 200 ரூபாய் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.