பயோமைனிங் மூலம் குப்பைகள் தரம் பிரிப்பு..
லால்குடி நகராட்சி பகுதியில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் பயோமைனிங் மூலம் குப்பைகள் தரம் பிரிப்பு. 50 ஆண்டுகாலமாக குவியலாக சேமிக்கப்பட்ட குப்பைகளுக்கு தீர்வு.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் 50 ஆண்டு காலமாக சேமிக்கப்பட்ட குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோமைனிங் மூலம் தரம் பிரிக்கும் பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் பணிகளை தொடங்கி வைத்தார்.
லால்குடி நகராட்சியில் சுமார் 50 ஆண்டு காலமாக சேமிக்கப்பட்ட குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோமைனிங் மூலம் ரூ.73 லட்சம் மதிப்பில் தரம் பிரிக்கும் பணிகளுக்கான துவக்க விழா நடைப்பெற்றது.
பயோமைனிங் மூலம் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் இயக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
நகராட்சி கமிஷனர் குமார், துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன், நகராட்சி கவுன்சிலர்கள் மருதமலையான், செந்தில், முஸ்தபா , ராதிகா வீரமலை மற்றும் துப்புறவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
50 வருடங்களாக மலை போல குவிக்கப்பட்டுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமிக்கப்பட்ட குப்பைகளை 180 நாட்களில் தரம் பிரித்து, அவற்றை அப்புறப்படுத்தி இடத்தை தூய்மை செய்து, அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படும் என்று நகராட்சி கமிஷனர் குமார் தெரிவித்தார்.