ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர்கள் சங்க கூட்டம்

0 321
Stalin trichy visit

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் 26.2.2023 நேற்று மாலை 4.00 மணி அளவில் நாடார்தெரு செயலாளர்  A விஜயா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் AITUC கட்டட சங்க திருச்சி மாவட்ட தலைவர் MR முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

மார்ச் 8ல் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்

பெண் தொழிலாளர்களுக்கு பிரசவகால உதவியாக 6 மாத விடுப்பும் ரூபாய் 90 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்

இஎஸ்ஐ பி எஃப் திட்டத்தை கட்டுமான தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்

பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து செலவையும் வாரியமே ஏற்க வேண்டும்

புதிதாக பதிவதற்கு கிராம நிர்வாக அதிகாரி கையொப்பம் இடுவதை கைவிட வேண்டும்

இதுவரை வழங்கிக் கொண்டிருக்கும் ஓய்வூதிய தாரருக்கு பல்வேறு காரணங்களை கூறி ஓய்வூதியம் மறுக்கப்பட்டு வருவதை கண்டித்து

கிராம நிர்வாக அதிகாரி மூலம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் இயக்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் 6 இடங்களில் நடைபெறுகிறது

சோமரசம்பேட்டை பஞ்சாயத்துR ஹேமலதா தலைமையில் யூகோ வங்கி அருகில் இருந்தும்

நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் B வித்யா தலைமையில் கோனார்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருந்தும்

அதவத்தூர் பஞ்சாயத்தில் T சந்திரா தலைமையில் ரேசன் கடையில் இருந்தும்

அல்லித்துறை பஞ்சாயத்தில் B பல்கிஸ்பானு தலைமையில் அல்லித்துறை பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் இருந்தும்

இனாம்குளத்தூர் பஞ்சாயத்தில் S முத்துலெச்சுமி தலைமையில் ஒத்தக்கடையில் இருந்தும்

தாயனூர் பஞ்சாயத்தில் S லெட்சுமிபிரபா தலைமையில் மாரியம்மன் கோயில் அருகில் இருந்தும்

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 தொழிலாளர்கள் குறையாமல் ஊர்வலமாக சென்று கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற உள்ளது இதில் மாநில மாவட்ட ஒன்றிய தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள் என இதன் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்

கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட துணைத் தலைவர்S முத்தழகு, மாவட்ட துணைச் செயலாளர்  M மருதம்பாள், தேசியக் குழு உறுப்பினர்  D நிர்மலா, ஒன்றிய துணைத் தலைவர்  T சந்திரா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு முடிவில் கீழவயலூர்  J நதியா நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.