பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, செப். 16 திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று (செப்.15) முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் பொய்யாமொழி பாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி..தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளாரே எனக் கேட்டபோது….. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் பொழுது மின்வெட்டு ஏற்பட்டது தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்சனை இருந்து வருகிறது முதலமைச்சரின் தொகுதியான பெரம்பூர் தொகுதியிலும் மின்வெட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கூறினால் அதை ஏற்றுக் கொண்டு சரி செய்ய வேண்டும் அதை விடுத்து அந்த பிரச்சனையை மூடி மறைப்பது சரி கிடையாது என்றார்.