மின்சாரம் பாய்ந்து கோழி பண்ணை உரிமையாளர் பலி

0 470
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் 40 வயதான சுரேஷ். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். சுரேஷ் நன்னிமங்கலம் கிராமப் பகுதியிலேயே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சுரேஷ் வழக்கம்போல் வீட்டிலிருந்து அவரது கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு கோழிப்பண்ணையில் மின் பழுது ஏற்பட்டதால் மின் இணைப்பை துண்டிக்காமல் மின் ஒயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் லால்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் லால்குடி காவல் ஆய்வாளர் பிரபு உத்தரவின் பேரில் சம்பவ இடத்தில் போலீசார் சென்று சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

பட்டப் பகலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நன்னி மங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.