அன்பில் தர்மலிங்கம் 30ஆம் ஆண்டு நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 459
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்
திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் ஒருங்கிணைந்த  திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான   கே.என். நேரு   தலைமையில்  நாளை காலை 8.00 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றோம் .
அதனை தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்து உள்ள திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், அன்பில்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்துகின்றோம் .

இந்த நிகழ்வில்  மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.