பாலம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ கதிரவன்..

0 273
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கீழவாங்கரம் கிராமத்தில் ரூ. 334.70 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் கட்டுமான பணிகளை எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார்.

மண்ணச்சநல்லூர் அருகே கீழவங்காரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 334.70 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் குத்துவிளக்கேற்றி பூமி பூஜை நடைப்பெற்று கட்டுமான பணிகளுக்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர், சமயபுரம் திமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.