வேளாண் கல்லூரி மாணவர்களின் பயிற்சி நிறைவு

0 247
Stalin trichy visit

 

எம்.ஆர்.பாளையம் நாளந்நா வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் ‘கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டம்’ நிறைவு விழா மற்றும் விவசாயக் கண்காட்சி, மார்ச் 7 ஆம் நாள், வெங்கங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வை, பள்ளித் துணைப் பேராசிரியர் திருமதி தனலட்சுமி அவர்கள் தொகுத்து வழங்கினார். பின் பள்ளிப் பேராசிரியர் திரு.‌ B. சுந்தர் அவர்கள் வரவேற்புரை அளித்தார் இதில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி துணைப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளரான முனைவர் P. சமீராபானு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விருந்தினர்களுக்கு நினைவாகக் கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வருகை அளித்த விருந்தினர் அனைவரும், சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் ரோஜா செடிகளை நட்டனர். பின் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் ‘கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டம்’ விவசாயக் கண்காட்சி மற்றும் நிறைவு விழா நடைபெற்றது. கண்காட்சியில் பல்வேறு மாணவர்கள் மற்றும் விவசாறிகள் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.‌ இறுதியாகப் பள்ளி மாணவர்களுக்கு விலையின்றிப் பழ மரக்கன்றுகள் மற்றும் பூமரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.