மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

0 268
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள புனித தோமையார் மக்கள் மன்றத்தில் டிஜிட்டல் மகளிர் தினத்தை முன்னிட்டு பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் குறித்து பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் நாளை நடைபெற உள்ளது.

இருங்களூர் ஊராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் குறித்து இருங்களூர் ஊராட்சி மன்றம்,சமயபுரம் லயன்ஸ் கிளப் , எக்விடாஸ் வங்கி இணைந்து நடத்தும் டிஜிட்டல் மகளிர் தினம் பெண்களுக்காக ஐந்து கிலோமீட்டர் மாரத்தான் ஒட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணி கலந்து கொள்ள உள்ளார். காலை 7 மணிக்கு போட்டி தொங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.