தென்னையில் ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்தும் முறை..

0 404
Stalin trichy visit

தென்னையில் ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்தும் முறை- வேளாண் மாணவர் விளக்கம்.

கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் ஆ.பிரகாஷ் தென்னையில் ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது,

வேப்ப எண்ணெய்+ பூண்டு கரைசல் :-

இந்தியாவில் தேங்காய் உற்பத்தி இந்தியபொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகளவில் இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. 2009 ஆம் ஆண்டுல் இந்தியாவின் உற்பத்தி 1,08,94,000 டன்களாக இருந்தது. தென்னையின் பொருளாதார வளர்ச்சி குறைப்பது ஈரியோஃபைட் பேன்கள் முக்கிய பங்காற்றின.தென்னை ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் மற்றும் பூண்டு கரைசலைப் பற்றி கீழ் காண்போம்.

வேப்ப எண்ணெய்+பூண்டு கரைசளுக்கு தேவைப்படும் பொருட்கள் :-

200 மி.லி வேப்ப எண்ணெய்,200 கி.கி பூண்டு, 50 கி.கி சாதாரண சோப்பு

செய்முறை :-

சோப்புக் கட்டினை துண்டுகளாக்கி 500 மி.லி. தண்ணீரீல் கரைக்க வேண்டும்.200கி.கி பூண்டினை அரைத்து 300 மி.லி தண்ணீருடன் சேர்க்கவும். 500 மி.லி சோப்பு கரைசலை 200 மி.லி வேப்ப எண்ணெய்யுடன் சேர்க்கவும்.வேப்ப எண்ணெய் , சோப்பு கரைசலுடன் பூண்டு கரைசலை சேர்க்கவும். இந்த 1 லிட்டர் கரைசலுடன் 9 லிட்டர் தண்ணீர் சேர்த்த கரைசலை தென்னையில் அடிக்கவும்.

பயன்கள் :-
தென்னையில் ஈரியோஃபைட் பேன்களை கட்டுப்படுத்த இயலும்.மகசூல் அதிகரிக்கும்

Leave A Reply

Your email address will not be published.