வாழைக் கன்று நேர்த்தி முறை..
வாழைக் கன்று நேர்த்தி முறை ( Banana sucker treatment) – வேளாண் மாணவர் விளக்கம்.
கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் ஆ.பிரகாஷ் வாழைக் கன்று நேர்த்தி முறை பற்றி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது,
இந்தியாவிலேயே வாழை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் வாழை சுமார் 12 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. வாழையில் நூற்புழு மற்றும் பனாமா வாடல் கட்டுப்படுத்த வாழை நேர்த்தி அறிமுகம் செய்யப்பட்டது. வாழை கன்று நேர்த்தி முறை பற்றி கீழ் காண்போம்.

வாழை நேர்த்தி செய்ய தேவையான பொருட்கள்:
வாள் நேர்த்தி , கார்போஃப்யூரான் 3 ஜி ,0.2 % கார்பென்டாசிம் (2கிராம்/1 லிட்டர் தண்ணீர்),
களிமண் கூழ்
நேர்த்தி முறையில் வாழை ரகங்கள்: நேந்திரன்,ரொபஸ்டா,மொந்தன்,பூவன்,சிவப்புவாழை,ரஸ்தாலி ,கற்பூரவள்ளி
வாழை நேர்த்தி முறை :
வாள் உறிஞ்சியை தேர்வு செய்ய வேண்டும். வேர்கள் மற்றும் சிதைந்த பகுதியை ஒழுங்கமைக்கவும்.களிமண் கூழிலில் உறிஞ்சிகளை நினைக்கவும். புழுக்கள் களிமண் கூழிலில் தோய்க்கப்பட்டன.கார்போஃப்யூரான் 3 ஜி கரைசலில் நனைக்க வேண்டும்.உறிஞ்சிகளின் நடவு.தரமான நூற்புழு அற்ற வாழை கன்று வளர்த்தல் .
பயன்கள் :
நூற்புழுக்களை முற்றிலும் அகற்ற இயலும். வாழை நேர்த்தியில் கார்பென்டசிம் சேர்ப்பதன் மூலம் பனாமா வாடல் கட்டுப்படுத்தப்படுகிறது.