சட்டப்பேரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் : அமைச்சர் உதயநிதி

0 315
Stalin trichy visit

தமிழகத்தில் முதல்முறையாக 25 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் பல்வேறு போட்டிகளை விளையாட்டு துறையின் கீழ் நடத்தி உள்ளோம் – வரும் சட்டபேரவை கூட்டத்தில் விளையாட்டு துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வைக்க உள்ளோம்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உங்களது பணி குறித்த கேள்விக்கு?

விளையாட்டு துறை சார்ந்து முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்க உள்ளோம்.

25 கோடி செலவில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டி பல்வேறு மாவட்டத்தில் நடத்தி உள்ளோம் – விரைவில் இறுதி போட்டி நடத்தி சென்னையில் முதலமைச்சர் கையால் விளையாட்டு விரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம்.

தஞ்சை செங்கிப்பட்டி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி எப்போது கொண்டு வருவீர்கள் என்ற கேள்விக்கு – அதற்காக பார்வையிட தான் வந்துள்ளோன், விரைவில் விபரங்களை கூறிகிறேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.