அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிகள் : சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

0 305
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சிறுதையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து 2021 22 ஆம் ஆண்டில் ரூபாய் 18 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
மேலும் 2022-233 ஆம் ஆண்டில் ரூபாய் 33 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளியில் நடைபெறும் கட்டிடப் பணிகளை லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.