அரிஸ்டோ மேம்பால பணிகள் : திருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு

0 346
Stalin trichy visit

 

திருச்சி, ஏப்.11 திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் þமுடிந்துள்ள நிலையில் அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அரிஸ்டோ மேம்பாலப்பணிகளை   பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர்:-தமிழக அரசு இரண்டு முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது இதை போன்று தொடர்ந்து மற்ற மசோதாவுக்கும் ஆளுநர்கையெழுத்திட்டு சட்டமாக்க வேண்டும்.

ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும், தடுப்பு சுவராக இருக்கக் கூடாது என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.