இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ.

0 331
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம்
ஊராட்சியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பங்கேற்ற திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும். நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாக கூடி இவ்உணவை உண்பது வழக்கம் இது சூரியன் மறைந்த பின்னரே உட்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.இதில் திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி.தியாகராஜன் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர்.அம்பிகாபதி மற்றும் ஒன்றிய செயலாளர்களும் பேரூர் செயலாளர்களும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.