சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

0 10
Stalin trichy visit

திருச்சி, செப். 18  சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து – திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி மாவட்டம் மணி கண்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை க் சேர்ந்தவர் முகமதுரபீக் (வயது 25). இவர் கடந்த 2022-ம் ஆண்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமியிடம் பாலியல்  ரீதியாக அத்துமீறி நடந்து, துன்புறுத்தி உள்ளார்.  இதில் பாதிக்கப்பட்ட சிறுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பேலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது ரபீக்கை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கில் சுமதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் மகளிர் கோர்ட்டு நீதிபதி சண்முகபிரியா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் முகமது ரபீக்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் கோர்ட்டு நடவடிக்கைகளை சிறப்பாக கவனித்த பெண் போலீஸ் சுதாமதி மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.