சமயபுரத்தில் அம்பேத்கர் 133வது பிறந்த நாள் விழா

0 259
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சியின் சார்பில் அவரது திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14/ம் தேதியை பொது விடுமுறையாகமத்திய அரசு அறிவித்துள்ளது
பட்டியல் சாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பள்ளியிலும், சமூகத்திலும் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தாலும், அனைத்து தடைகளையும் மீறி கல்வி கற்று மிக உயரிய இடங்களை அடைந்தார்.
சமூக சீர்திருத்தத்திற்காக
தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மத்திய மாநில அரசுகள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்
சமயபுரம் நால்ரோட்டில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் அவரது திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஎஸ்பி இளங்கோவன், சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், ஐஜேகே மாவட்ட செயலாளர் செல்வகுமார், கூத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், சமயபுரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பிரவீன், விடுதலை சிறுத்தை கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர் ஏகலைவன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் தியாகு, சுப்ரமணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஜோதிபாசு,முருகன், செழியன்,ம அமுமுக,ஒன்றிய செயலாளா், சதீஸ் அமுமுக, பணமங்கலம் பாஸ்கா் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.