பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் – காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
திருச்சி ஏப் 28 திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாவின் துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் K.ஜெயகர்ணா தொழிலதிபராவார். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று இரவு சுமார் 8மணி அளவில் கொலை மிரட்டல் விடுத்து ஒரு தொலைபேசி வந்தது. இது தொடர்பாக திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியாவை நேரில் சந்தித்து புகார் தொடர்பான விளக்கங்களும் கொலை மிரட்டல் விடுத்து தொடர்பான செல்போன் ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில்
நேற்று இரவு எட்டு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் எனக்கு போன் செய்து கடைசி ஆசையை தீர்த்துக் கொள் என தெரிவித்தார்.
நீ பாரதிய ஜனதா கட்சியில் பெரிய புள்ளி என தெரிவிக்கின்றனர் அது தான் புள்ளிய அழிக்க இருக்கிறோம் என தெரிவித்தான். எனவே இது தொடர்பான விளக்கங்களையும் ஆதாரங்களையும் காவல்துறை ஆணையரிடம் வழங்கினோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என தெரிவித்துள்ளார்.