தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள புவனேஸ்வரிநகரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்ணச்சநல்லூரில் உள்ள புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் 28 வயதான சரவணன். இவர் திருச்சி தென்னூரில் உள்ள தனியார் மருத்துவ ஏஜென்சில் கடந்த ஒன்றை வருடமாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்குச் செல்லும் அவரது அம்மாவை தனது மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தவர். அங்கு சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.மதியம் ஒரு மணி அளவில் அவரது அம்மா தேன்மொழி வந்து பார்க்கும்போது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து அவரது அம்மா தேன்மொழி கொடுத்த புகார் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.