கடன்தொல்லையால் பெயிண்டர் தற்கொலை

0 255
Stalin trichy visit

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே கே.பெரியப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் தீபன் சக்ரவர்த்தி(32). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடன் தொல்லையால் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மணப்பாறை
போலீசார் உடலை கைபற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.