சிறுமியிடம் அத்துமீறிய 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது…

0 396
Stalin trichy visit

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற சிறுமி இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். பெங்களூரில் சிறுமியை மீட்டு அவருடன் இருந்த இருவரை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியிடம் வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி (வயது 32) என்பவர் மிஸ்காடு மூலம் பழகி காதலிப்பது போல் ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கூறி பெங்களூரு அழைத்துச் சென்றதும், பெங்களூருவில் நண்பர்களான வேலூரைச் சேர்ந்த ரியாஸ் (வயது 32), சதாம் உசேன் (வயது 28) ஆகியோருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வேலூரில் இருந்த முபாரக் அலியையும் கைது செய்த போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மூவரையும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.