குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

0 285
Stalin trichy visit

திருச்சி திருத்தலையூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள திருத்தலையூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் சுமார்100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்பொழுது மீனாட்சி என்ற பெண் மயங்கி விழுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.