ஸ்ரீரங்கத்தில் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை மேயர் திறந்து வைத்தார்

0 323
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் வார்டு எண் 3-ல் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டி அருகே மரக்கண்றை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமை தாங்கினார். வட்டக் கழக செயலாளர் பன்னீர்செல்வம் மூன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.