இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0 340
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் , மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
CPI(ML) கட்சியின் வெகுஜன அரங்கமான அனைத்திந்திய விவசாய கிராமபுற தொழிலாளர் சங்கம்(AlARLA) சார்பாக  நேற்று (மே 17) தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அம்பானி – அதானியை வளர்க்கும் மோடி ஆட்சி வேண்டாம் ஏழை தொழிலாளர். தலித்துகளுக்கு வாழ்வாதாரம், ஊதியம்,வீடு ஓய்வூதியம் வேண்டும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு CPI(ML) கட்சியின் வெகுஜன அரங்கமான அனைத்திந்திய விவசாய கிராமபுற தொழிலாளர் சங்கம் (AlARLA) சார்பாக CPI(ML) கட்சியின் மாவட்டகுழு உறுப்பினர் கே.மாசிலாமணி தலைமையில் AIARLA பொருப்பாளர் கே.கருப்பையா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் கோஷங்கள் முழங்க நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளான மோடி அரசே! டிஜிட்டில் வருகை பதிவேடு மற்றும் ஆதார் இனைப்பு முறையை ரத்து செய்ய கோரியும், உணவு பொருளுக்கு விதிக்கபட்டுள்ள
ஜி, எஸ், டி வரியை ரத்து செய்ய வேண்டும், சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்க வேண்டும்,
சமுத்திரம் மற்றும் கே.பெரியபட்டி ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கபட்டுள்ள இனைப்புகளுக்கு குடிநீர் வழங்கு, சமுத்திரம் ஊராட்சியில் பொதுகழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், கே.பெரியபட்டி ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ 2000 கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்,
கே.பெரியபட்டி ஊராட்சி மரவனூர் பொது சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை அமைத்து கொடுத்து சாலை வசதி ஏற்படுத்திதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து கோரிக்கை அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர்  அமிர்தவள்ளி ராமசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கபட்டது.

மற்றும் சமுத்திரம் ஊராட்சி பொதுமக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் மற்றும் பொதுகழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர கோரி வட்டாச்சியர் அலுவலகத்தில் துணை வட்டாச்சியரிடம் பொதுமக்களுடன் மனு அளிக்கபட்டது. மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை CPI(ML) கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஞானதேசிகன்,
மாநிலகுழு உறுப்பினர், வழக்கறிஞர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள், போரட்டத்தை வாழ்த்தி நகர செயலாளர் பி.பாலு, ஒன்றிய செயலாளர் எம்.தங்கராசு,
மாவட்டகுழு உறுப்பினர் ஆவா.இளையராஜா, ஆகியோர் AlCCTU தொழிற்சங்க தலைவர் A.காதர் ஷெரீப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்வில் மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக்
S, இளையராஜா,
நகரகுழு உறுப்பினர்கள் A.காதர்ஷெரீப், M.முருகேசன்,
D. சங்கர்ராஜ்
,T.அறிவழகன்,
A. கனகராஜ் ஒன்றியகுழு உறுப்பினர்கள்
P. பெருமாள், P.சுப்பன், மற்றும் சரவணன், அழகர், மணிகண்டன், உட்பட 27 பெண்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,

Leave A Reply

Your email address will not be published.