ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?
திருச்சி மாவட்டம் , மருங்காபுரி வட்டம் நல்லூர் ஊராட்சி பில்லுப்பட்டியில் முறிந்து விழும் நிலையில் அமைந்துள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கக்கூடிய தெருவின் நடுவே உயர் மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது . இக்கம்பத்தில் இருந்து அங்கு வசிக்ககூடிய மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் பயன் பெறுகின்றனர். பல முறை மனு அளித்து எந்த வித நடவடிக்கை எடுக்கபடவில்லை . எனவே உயிர் பலி ஏற்படும் முன் மின்கம்பத்தை சரி செய்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.