மருங்காபுரி வட்டார மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி
திருச்சி மாவட்டம் , மருங்காபுரிவட்டம் , வளநாடு அமைந்துள்ள வட்டார மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியின்றி மகப்பேறு மற்றும் உள்புற நோயாளிகள் கடும் சிரமத்தில் அவதிப்படுகின்றனர். மருங்காபுரி வட்டாரத்தில் இருக்க கூடிய பொதுமக்கள் அவசர முதலுதவி & பொது சிகிச்சை, எக்ஸ்ரே , மற்றும் குழந்தை பேறு என இம்மருத்துவமனைக்கு சுமார் ஒரு நாள் வீதம் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவது குறிப்பிடதக்கது. மேல் சிகிச்சைக்காக மணப்பாறை 25 கிலோமீட்டர் , திருச்சி 58 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய சிரமத்தை தவிர்த்து துறை சார்ந்த அதிகாரிகள் அடிப்படை வசதி செய்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.