நரிகுறவர் இனமக்களின குழந்தைகளுக்கு ஜாதி சான்று வழங்காமல் வஞ்சிக்கும் முசிறி சார் ஆட்சியர்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பழங்குடி இன மக்களான நரிக்குறவர்கள் சுமார் 124 குடும்பங்களை சேர்ந்த 390 நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை கல்வி பயின்று வருகின்றனர். ஜாதி சான்றிதழ் வேண்டி துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளனர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் கடிதத்தை வட்டாட்சியர் வனஜாவிடம் வழங்கி உள்ளனர் ஆனால்
வட்டாட்சியராக பணிபுரியும் வனஜா பழங்குடி இனச் சான்றிதழ் வழங்க தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் தான் தங்கள் மனுவை முசிறி ஆர்டிஓவிடம் அனுப்பி வைப்பதாகவும் முசிறி சாராட்சியாரை சென்று பார்க்குமாறு மனுதாரரிடம் கூறி உள்ளார் மனுகாரர்கள் முசிறி சாராட்சியார் மாதவனை பார்க்கச் சென்றனர் மாதவன் மனுதாரர்களிடம் அவர்களூடைய பூர்வீக
சந்ததியினர் வழி தோன்றல் முறைகள் வேண்டும் என்று மனுதாரர்களை திருப்பி அனுப்பி உள்ளார்.
நரிக்குறவர் இன மக்களை எஸ்.டி பிரிவில் சேர்த்து ஜாதி சான்றிதழ் வழங்கிட விஜயன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் மனுவை விசாரித்த ஆட்சியர் சார் ஆட்சியர் மற்றும் கோட்டாச்சியருக்கு உடனடியாக நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டியல் இன சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்துள்ளார் ஆனால் இதுவரை சாராட்சியர் மாதவன் நரிக்குறவரின் 17 குழந்தைகளுக்குஜாதி சான்று வழங்காமல் அலைகழித்து
வருகிறார் தங்கள் குழந்தையின் எதிர்காலம் ஜாதி சான்றிதாலால் தடைப்படும் என வேதனை மக்கள்
மக்கள் மனதில் ஓடுகின்றது
தமிழக அரசு 2023ஜனவரி மாதம் 3 தேதி தமிழக அரசு அனைத்து வருவாய்த் துறையினருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் திருத்தப்பட்ட சட்டம் 197 6 வரிசையி எண்ஜ்-37ல் நரிக்குறவர்கள் பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்தவர் என
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது பழங்குடியினர் என்று நரிக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர்களுக்கு தமிழக அரசால் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது