ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு தரிசன திட்டம் : பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அறநியைலத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தபடி,
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களான திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ரூ.300/- கட்டணத்தில் தினமும் மாலை 3 முதல் 4 மணிவரை 500 பக்தர்களை மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பக்தர்கள் தங்கள் கருத்துக்களை jceotry25700.hrce@tn.gov.in என்ற இ மெயில் மூலமோ, அல்லது இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் என்ற முகவரிக்கோ 15.06.2023க்குள் தெரிவிக்கலாம்.