இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம்-கணவர் போலீசில் புகார்..

0 972
Stalin trichy visit

துறையூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்.கணவர் போலீசில் புகார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு செங்காட்டுப்பட்டி பகுதியில் வசிக்கும் நதியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். நதியா நர்சிங் முடித்துள்ளார் தற்போது கோம்பைபுதூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார்.

இந்நிலையில் நதியா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராமில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக திடீரென நதியாவை காணவில்லை.
இதனால் நதியாவை கணவர் உள்பட உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர் அப்போது
கணவர் புஷ்பராஜ் செல்போனுக்கு whatsapp மூலம் குறும் செய்தி ஒன்று வந்துள்ளது
அதை பார்த்த கணவர்
நதியா பிராகாஷ் உடன் சென்னை செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும்
தகவல் இருந்தது.

கணவர் அதனை துறையூர் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓடிய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை நதியாவை தொலைபேசி எண்ணைக் வைத்து தேடி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.