அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு.

0 274
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை போலீசார் சடலமாக மீட்டனர்.

மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமலருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமலர் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.