நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

0 362
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் உள்ள தௌலி குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் 80 வயதான ஆரோக்கியசாமி.இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தௌலி குளத்தில் குளிப்பதற்காக சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதுகுறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சிவக்குமார், தீயாவோ மகேந்திரன், சிறப்பு நிலைய போக்குவரத்து அமுதகுமார், வீரர்கள் ரமேஷ்குமார், அஜித்குமார், தரணிதரன், கனகராஜ் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேர தேடுதலுக்குப் பின் முதியவரை சடலமாக மீட்டனர்.பின்னர் முதியவரின் உடலை கல்லக்குடி போலீசாரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய கல்லக்குடி மோலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அருள்மேரி கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.