துவரங்குறிச்சியில் நள்ளிரவில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு.

0 2,221
Stalin trichy visit

மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் மதுரையில் இருந்து திருச்சிக்கு மற்றொரு அரசு பேருந்தும் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி புறவழிச் சாலையில் சிறிதுநேர இடைவெளியில் அடுத்தடுத்து செல்லும்போது மர்ம நபர் கல் வீசியதில் இரண்டு பேருந்துகளின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துநர்கள் துவரங்குறிச்சி போலீஸ் புகார் அளித்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து புறவழிச் சாலையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். நள்ளிரவில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.