தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்

0 575
Stalin trichy visit

திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறம் கவிழ்ந்து விழுந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஆம்பூர் கடைவீதி தெருவை சேர்ந்த வாசுதேவன்(38) ஓட்டி வந்துள்ளார். நடத்துநராக துறையூர் தம்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகம் (35) இருந்துள்ளார். இந்நிலையில் கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையின் இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் கிரேன் உதவியுடன் விபத்தில் கவிழ்ந்த பேருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாத்தலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சாலை குறுகலாக உள்ளதால் அதிவேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.