கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது: தீர்மானம் நிறைவேற்றம்

0 398
Stalin trichy visit

திருச்சி, மே 30 கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட மாநகர அனைத்து ஒன்றிய நகர பகுதி பேரூர் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மாநகர் முழுவதும் கழக கொடி ஏற்றி, கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர செயலாளர் அன்பழகன், மாநில மாணவர் அணி அமைப்பாளர் பி.எம்.ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணிகுமார், மற்றும் மண்டலகுழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.