மயானத்திற்கு செல்லும் பாதை சீரமைப்பு

0 283
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களம் புதூரில் எம்எல்ஏ கதிரவனின் நேர்முக உதவியாளர்கள் நேரில் சென்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.இதனையடுத்து பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்தனர்.

மண்ணச்சநல்லூர்சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார் கதிரவன். இவர் பதவியேற்றது முதல் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து கோரிக்கைகள் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறார். இந்நிலையில் மங்கலம் புதூரில் எம்எல்ஏ கதிரவனின் நேர்முக உதவியாளர்கள் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.