கோத்தாரி சுகர் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் சார்பில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன

0 778
Stalin trichy visit

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 150 மரக்கன்றுகளை நட்டனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் கோத்தாரி சுகர் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 150 மரக்கன்றுகள் இன்று நட்டனர்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இழந்த இயற்கையை மீட்டெடுக்கவும் வரும் தலைமுறையை காக்கவும்,காற்று மாசுபாடுகளிலிருந்து சுத்தமான காற்றை சுவாசிக்கவும் காட்டூர் கோத்தாரி சுகர் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் சார்பாக 10 மேற்பட்ட நாட்டு வகை மரங்களான வேம்பு,புங்கை,நீர்மருது உள்ளிட்ட 150 மரக்கன்றுகளை சுகர்மில் ஆலை வளாகத்தில் இன்று நடவு செய்தனர். சுவாசிக்க, நேசிக்க இந்த உலகத்தில் உன்னத கொடை என்றால் அது இயற்கை தான். நாம் சுவாசிக்க மரம், நேசிக்க பூஜிக்க பூக்கள், அழகு ரசிக்க பச்சை புல்வெளிகள் பொழுதுபோக்க விலகினங்கள் நமது உயிர் காக்க மூலிகைகள் கொடுத்த இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். தலைக்கு ஒரு மரம் நட்டு இருந்தால் இன்று தலை தெறிக்க விடும் கொரனாவை கதற விட்டிருக்கலாம். மாவிலை மரம் இருந்தால் ஆக்ஸிஜன் சுத்தமாக கிடைத்திருக்கும்,வாழை இருந்தால் பச்சையம் வைட்டமின்கள் கிடைத்திருக்கும், நச்சுக்களை அழிக்கும் நமது வேப்பிலை இருந்தால் நச்சுக்கள் நம்மை அண்டியிருக்காது, தின்னீர் பச்சிலைதான் இன்றைய சப்ஜா விதை என்கிறோம், துளசி இலை வீட்டில் கிருமிகளை தடுக்கும் நொச்சி இலை கொசுவை விரட்டும் ஆயிரமாயிரம் தந்த இந்த புவி மீட்டெடுக்க நாம் ஆயத்தம் ஆவோம் அனைவரும் ஒன்று திரண்டு அழிந்து வரும் இயற்கையை மீட்டெடுப்போம் என உறுதிமோழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கோத்தாரி ஆலையின் தொழில்நுட்ப பொதுமேலாளர் இராமச்சந்திரன் துணை பொது மேலாளர் புஷ்பராஜ் உதவி பொது மேலாளர் கோபி மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர் மற்றும் உலகச் சுற்றுச்சூழல் உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்

 

Leave A Reply

Your email address will not be published.