சேலம் துணை ஆணையராக இருந்த மூர்த்தி திருச்சி எஸ்பியாக நியமனம்
திருச்சி எஸ்பியாக இருந்த மயில்வாகன்ன மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சேலம் துணை ஆணையராக இருந்த பி.ஏ.மூர்த்தி திருச்சி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பவன்குமார் ரெட்டி, திருவண்ணாமலை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே எஸ்பியாக இருந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் 54 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.