போஷான் அபியான் திட்டத்தை கிராம அளவில் சிறப்பாக செயல்படுத்தியவர்களுக்கு சான்றிதழ்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷான் அபியான் திட்டத்தை கிராம அளவில் சிறப்பாக செயல்படுத்திய அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள்,

மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் என மொத்தம் 67 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் தால ரூ.12 ஆயிரத்து 500-க்கான காசோலையினை கலெக்டர் சிவராசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.