ஜாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு மிரட்டல் : காவல்துறையில் புகார்

0 337
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  திருச்சிமாவட்டம், வளநாட்டை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள கலர்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இருசமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.இந்நிலையில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அங்குள்ள முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். ஆனால் மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சமுதாய மக்கள் மருங்காபுரி வட்டாட்சியர் மணப்பறை துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்களை சாமிகும்பிட அனுமதிக்காமல் கோவிலை இடித்து விட்டனர். மேலும் வரி வாங்காமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஊரை காலி செய்யக்கோரி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஜாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்துகின்றனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஉள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.