சரத்பவார் கட்சியை உடைத்தது அமலாக்காத்துறைதான் : முத்தரசன் குற்றச்சாட்டு
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில்
மஹாராஷ்டிராவில் சரத்பவார் கட்சி உடைந்ததற்கு அமலாக்கத்துறை தான் காரணம். அமலாக்கத்துறை அங்கு அவர்கள் பணியை சிறப்பாக செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்கள். பா.ஜ.க வின் கைத்தடியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கட்சிகளை உடைக்கும் வேலைகளை அமலாக்கத்துறை செய்வார்கள். தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கி விட்டார்கள்.
பாஜகவை எதிர்த்து பேசினால் சிறை நிச்சயம், இதுதான் இன்றைய ஜனநாயக படுகொலை இதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
மேகத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். மேகதாட்டில் அணை கட்டுவோம் என்கிற திட்டம் அவர்களிடம் இருந்தால் அதை அவர்கள் கைவிட வேண்டும்.