கொள்ளை போகும் கனிம வளங்கள் : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 1,498
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஒக்கரை கிராமம் – சிக்கத்தம்பூர் கிராமம் இரு கிராமங்களுக்கு சொந்தமான மலை குன்று உள்ளது. இந்த குன்றில் கட்டிட வேலைக்கு பயன்படும் அரளை கற்கள் பாறைகளாக உள்ளன. இதனை அனுமதி பெறாமல் டெண்டர் விடாமல் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அனுமதியும் பெறாமல் வெங்கடாஜலபுரத்தை சேர்ந்த வடிவேலு என்பவர்  ஆட்களை வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக பாறைகளை உடைத்து டிராக்டரில் எடுத்துச் செல்கிறார். இது குறித்து கிராமமக்கள் பலமுறை சிக்கத்தம்பூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கதிரவன் மற்றும் துறையூர் வட்டாட்சியர் அவர்களுக்கு பலமுறை நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கிராம நிருவாக அலுவலர் அவர்களை காப்பாற்றி வருகிறார். இது பற்றி வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்த போது அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். ஆனால் இதுவரை இந்த நாள் வரை பாறைகள் உடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.