பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேமுதிக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

0 368
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை்முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம் லால்குடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை்முன்னிட்டு
பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேமுதிக திருச்சி வடக்கு மாவட்டம் லால்குடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங கும் விழா தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ். குமார் தலைமையில் நடைபெற்றது.இதில்
பள்ளியில் பயிலும் 149 மாணவ மாணவிகளுக்கு நோட்டு,பேனா ,பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் மகாமுனி, லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.